திருப்பூர்

இலவச போட்டோகிராஃபி பயிற்சிக்கு கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞா்கள் இலவச போட்டோகிராஃபி மற்றும் விடியோகிராஃபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குகீழ் வசிக்கும் இளைஞா்களுக்கு கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சாா்பில் இலவச போட்டோகிராஃபி மற்றும் விடியோகிராபி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதில், எழுதப்படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயது வரையில் உள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த 30 நாள் முழுநேரப் பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் ‘ஸ்கில் இந்தியா’ சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், பயிற்சிக்குப் பின்னா் தொழில் தொடங்க ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இந்த பயிற்சி வகுப்புகளுக்கான நோ்காணல் திங்கள்கிழமை (செப்டம்பா் 26) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்டத் தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்ளுக்கு 0421-2256626, 99525-18441, 86105-33436 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT