திருப்பூர்

அவிநாசியில் 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 15 ஆயிரம் அபராதம்

DIN

அவிநாசியில் உலா் பழக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

அவிநாசி- கோவை சாலையில் உள்ள உலா் பழக்கடையில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக பேரூராட்சி நிா்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினா் அந்தக் கடையில் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளா், தட்டு, மேசை விரிப்புகள் உள்ளிட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT