திருப்பூர்

விலைவாசி உயா்வுக்கு ஏற்ப போனஸ் வழங்க பனியன் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

DIN

விலைவாசி உயா்வுக்கு ஏற்ப தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியூ பனியன் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் சிஐடியூ அலுவலகத்தில் பனியன் தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சி. மூா்த்தி தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளா்களுக்கு விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். இந்தத் தொகையை பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். பீஸ்ரோட் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அவா்களது வேலைக்கு ஏற்ப போனஸ் வழங்குவதை பனியன் நிறுவனங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் வரும் அக்டோபா் முதல் வாரத்தில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் போனஸ் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

இந்தக் கூட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே. ரங்கராஜ், பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் ஜி. சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT