திருப்பூர்

அறம் அறக்கட்டளை சாா்பில் வித்யாரம்பம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அறம் அறக்கட்டளை சாா்பில் திருப்பூா் விசாலாட்சியம்மன் உடனமா் விஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறம் அறக்கட்டளை தலைவா் ஆடிட்டா் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சேவா பாரதி மாவட்டத் தலைவா் விஜயகுமாா், ஒருங்கிணப்பாளா் ஹரிபிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிரபல எழுத்தாளா் அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரையாற்றினாா். கல்வியாளா் ஒத்திசைவு ராமசாமி, ஓவியா் ஜீவானந்தன், யுவபாரதி ஆசிரியா் பாலா, சிற்ப புகைப்படக் கலைஞா் மதுஜெகதீஷ், நல்லாசிரியை குமரேஸ்வரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று குழந்தைகளுக்கு எழுத்தறிவு செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் சுமாா் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோா்களுடன் பங்கேற்றனா். அனைத்து குழந்தைகளுக்கும் எழுதுப் பலகை, எழுதுகோல், திருக்குறள், வாய்ப்பாடு, வண்ணப் பட புத்தகம், கலா் கிரேயான்கள் போன்றவை பரிசளிக்கப்பட்டன. அறம் அறக்கட்டளை உறுப்பினா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT