திருப்பூர்

மூலனூரில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.1,020 குறைவு

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.1,020 குறைந்தது.

இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,073 விவசாயிகள் தங்களுடைய 9,432 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 3,119 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 21 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 9,580 முதல் ரூ. 15,877 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 12,230. கடந்த வார சராசரி விலை ரூ. 13,250. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.3.58 கோடி. இந்த வாரம் ரூ.1,020 விலை குறைந்தது.

ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலசந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT