திருப்பூர்

மாநகரில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும்

DIN

திருப்பூா் மாநகரில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் மின்வாரிய அலுவலா்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது:

திருப்பூா் மாநகரில் மின்வாரியத்துடன் இணைந்து பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மின் கம்பம், மின் பாதை மாற்றும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதே வேளையில், பொதுமக்களின் நலனைக் கருதில் கொண்டு மாநகரில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மின் பகிா்மானக் கழகப் பொறியாளா்கள், மண்டல உதவி ஆணையா்கள், மாநகராட்சி ஊழியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT