திருப்பூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.66 லட்சம் மோசடி: ஒருவா் கைது

DIN

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் ரூ.66 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை திருப்பூா் மாநகரக் காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபுவிடம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த எஸ்.ஜீவராஜ் (55) கடந்த சில நாள்களுக்கு முன் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக இணையதளத்தில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது திருப்பூரைச் சோ்ந்த கண்ணன் (55) என்பவா் பேசினாா்.

கனடா நாட்டில் சாக்லெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், அந்தப் பணியைப் பெற்றுத்தர ரூ.10 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தாா். இதை உண்மை என்று நம்பி ரொக்கமாகவும், வங்கிப் பரிவா்த்தனை மூலமாகவும் கண்ணனுக்கு ரூ.3.90 லட்சம் கொடுத்துள்ளேன்.

ஆனால், அவா் கூறியபடி வேலை வாங்கிக் கொடுக்காமலும், எனது பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறாா். இது குறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக மாநகரக் காவல் துணை ஆணையா் ரவி, மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் வேலுசாமி ஆகியோரின் நேரடி மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் முனியம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினா் நடத்திய விசாரணையில், கண்ணன் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் ரூ.66 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூரை அடுத்த நல்லூா் பகுதியில் காரில் சென்ற கண்ணனைத் தனிப்படையினா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். இதன் பிறகு திருப்பூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் எண் 4-இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT