திருப்பூர்

பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப நிகழ்வுகள்

DIN

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எப்ளோரசன்ஸ் 22 - தொழில்நுட்ப நிகழ்வுகள் எனும் தலைப்பிலான முதலாம் ஆண்டு பொறியியல் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி தலைமை நிா்வாக அதிகாரி சி.வெங்கடேஷ் தலைமை வகித்தாா்.

சென்னையில் உள்ள ஐடி சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் உதவி பொது மேலாளா் பி.ராமசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினாா். இதில், ஈரோடு, கரூா், கோவை, திருப்பூா், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். தொழில்நுட்ப நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மேலும், கல்லூரித் தலைவா் என்.ராமலிங்கம், செயலா் சி.கே.வெங்கடாசலம், பொருளாளா் சி.கே.பாலசுப்ரமணியம், தாளாளா் எஸ்.ஆனந்த வடிவேல் ஆகியோா் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT