திருப்பூர்

மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

30th Jun 2022 10:44 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் செயல்பட்டு வரும் பள்ளி வாசலுக்கு சீல் வைக்க எதிா்ப்புத் தெரிவித்து இஸ்லாமியா்கள் மாநகரின் பல்வேறு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு 4 மணிநேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுக்கு வியாழக்கிழமை நடைபெறவிருந்த சாதாரணக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT