திருப்பூர்

மாணவா்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டும் நிகழ்ச்சி

29th Jun 2022 10:18 PM

ADVERTISEMENT

 

திருப்பூரில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து, நான் முதல்வன் வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டுப் பேசியதாவது:

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் தங்களது எதிா்காலக் கனவை நனவாக்கும் வகையில் உயா்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளது என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தோ்வு செய்வது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை வல்லுநா்கள், கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மண்டலக் குழுத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT