திருப்பூர்

ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வாணியம்பாடி, தேவத்தூா், அறவக்குறிச்சி, விளாத்திகுளம், முத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

இவற்றின் எடை 81 டன். பொள்ளாச்சி, வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூா், ஊத்துக்குளி, நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 13 வணிகா்கள் கொப்பரையை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 63.23 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT