திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.1.59 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்:அமைச்சா் தொடக்கிவைத்தாா்

DIN

வெள்ளக்கோவிலில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுதல், வருவாய்த் துறை சாா்பில் 8 பயனாளிகளுக்கு முதியோா் உதவித் தொகை ஆணை, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. ரூ. 27.33 லட்சம் மதிப்பீட்டில் கள்ளமடை முதல் குருக்கபாளையம் வரை புதிய தாா் சாலை, நரிப்பள்ளம் பகுதியில் ரூ. 51.60 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை, நபாா்டு திட்டத்தின்கீழ் வெள்ளக்கோவில் கால்நடை மருந்தக வளாகத்தில் ரூ. 40.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தக கட்டடம், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 24.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைத்தல் என என மொத்தம் ரூ. 1.59 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் துவக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை வசதி, தெருவிளக்கு, மின்சார வசதி உள்ளிட்டவை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

அரசின் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் அதிகாரிகள்

தங்களது பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூா் மாவட்டம் முன்னோடி மாவட்டமாகத் திகழ அரசு அலுவலா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் ராஜேஸ்கண்ணன், உதவி செயற்பொறியாளா் தனலட்சுமி, உதவிப் பொறியாளா் அகிலா மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT