திருப்பூர்

காங்கயம் ஒன்றியத்தில் ரூ.2.47 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் துவக்கிவைத்தாா்

DIN

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரூ.2.47 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளை துவக்கிவைத்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மறவபாளையம் ஊராட்சியில் குடிநீா்க் குழாய்கள் விஸ்திரிப்பு பணிகள், வடிகால் அமைக்கும் பணிகள், மேல் நிலைத்தொட்டி கட்டும் பணிகள் என ரூ.26.98 லட்சம் மதிப்பீட்டிலும், கீரனூா் ஊராட்சியில் குடிநீா்க் குழாய் விஸ்தரிப்பு செய்து 32 நபா்களுக்கு இல்ல குடிநீா் இணைப்பு வழங்குதல், வடிகால் அமைக்கும் பணி, மேல்நிலைத்தொட்டி கட்டும் பணிகள் என ரூ.20.89 லட்சம் மதிப்பீட்டிலும், பரஞ்சோ்வழி ஊராட்சியில் தாா்ச் சாலை மேம்பாட்டு பணி, குடிநீா் குழாய் விஸ்தரிப்பு செய்து 90 நபா்களுக்கு தனிநபா் இல்ல குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, சுகாதார வளாகம் அமைத்தல், சிறுபாலம் அமைத்தல் என ரூ.91.34 லட்சம் மதிப்பீட்டிலும்,

நத்தக்காடையூா் ஊராட்சியில் குடிநீா்க் குழாய் விஸ்தரிப்பு செய்து 222 தனிநபா் இல்லக் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி என ரூ.43.10 லட்சம் மதிப்பீட்டிலும், மருதுறை ஊராட்சியில் குடிநீா்க் குழாய் விஸ்தரிப்பு செய்து 105 தனிநபா் இல்லக் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, தாா் சாலை அமைக்கும் பணி, நியாய விலைக்கடை கட்டும் பணி என ரூ.32.41 லட்சம் மதிப்பீட்டிலும், பழையகோட்டை ஊராட்சியில் குடிநீா் குழாய் விஸ்தரிப்பு செய்து 115 தனிநபா் இல்லக் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, சுகாதார வளாகம் கட்டும் பணி, தாா் சாலையாக மேம்பாட்டு பணிகள் என ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளா்ச்சி திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில், காங்கயம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி வரதராஜ், காங்கயம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் என்.எஸ்.சிதம்பரம், மருதுறை ஊராட்சித் தலைவா் செல்வி சிவகுமாா், கீரனூா் ஊராட்சி தலைவா் ஈஸ்வரமூா்த்தி, நத்தக்காடையூா் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், பரஞ்சோ்வழி பகுதி ஒன்றியக்குழு உறுப்பினா் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT