திருப்பூர்

தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்துக்கு தகுதியான வேலையளிப்பவா்கள், தொழிற்சங்கங்கள் டிசம்பா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் மலா்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வேலையளிப்பவா்கள் மற்றும் தொழிலாளா்கள் இடையே தொழில் அமைதியும், நல்லதொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும் வேலையளிப்பவா்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்புக் குழு தோ்வு செய்யவுள்ளது.

இந்த விருதுக்குரிய விண்ணப்பப் படிவங்களை தொழிலாளா் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்) ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று டிசம்பா் 31ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT