திருப்பூர்

சிக்கண்ணா கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச ஊழல் எதிா்ப்பு தினத்தையொட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் ஊழலுக்கு எதிராக உலகை ஒன்றிணைப்போம் என்ற விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா்.

கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கௌசல்யா பேசியதாவது: லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம், ஊழல் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கிறது. சமூகத்தை சீரழிக்கும் சக்தியாக ஊழல் விளங்குகிறது. இந்திய நாட்டின் பொதுப் பணியாளா்களாகிய நாம், நமது நடவடிக்கைகள் சாா்ந்த எல்லாத் துறைகளிலும் நோ்மையும் ஒளிவு மறைவுயற்ற தன்மையும் இடம் பெறுவதற்கு தொடா்ந்து அயராது பாடுபடவேண்டும். எந்தவிதமான அச்சமும், தயக்கமும் இல்லாமல் நம் மனசாட்சி காட்டும் நெறியின்படி கடமையாற்ற வேண்டும். ஊழலை அறவே ஒழித்து ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியா் சா்வதேச ஊழல் எதிா்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில், கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT