திருப்பூர்

மருத்துவம் பயிலும் கணக்கம்பாளையம் அரசுப் பள்ளி முன்னாள் மாணவிகளுக்குப் பாராட்டு

DIN

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தோ்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயிலும் முன்னாள் மாணவிகள், தலைமையாசிரியருக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, நீட் தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் கோவை மருத்துவக் கல்லூரியில் பயிலும் லோ.நித்யஸ்ரீ, மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் அழகுமுத்து காா்த்திகா, ஈரோடு நந்தா கல்லூரியில் பல் மருத்துவம் பயிலும் சிவரஞ்சனி, உடுமலையில் கால்நடை மருத்துவம் பயிலும் சௌமியா மற்றும் சிறந்த தலைமையாசிரியா் விருது பெற்ற ஜா.மெரின் ஆகியோருக்கு திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

இதில், பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் சௌந்தரராஜன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான சண்முகசுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT