திருப்பூர்

பள்ளி மாணவா்களுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின சட்ட விழிப்புணா்வு முகாம் அல்அமின் ஓரியண்டல் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு தலைமை வகித்த திருப்பூா் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.ஆதியன் பேசியதாவது:

நீங்கள் விரும்பாத செயலையோ அல்லது எண்ணத்தையோ ஒருவா் உங்களிடம் திணிக்கும்போது பாலியல் தொடா்பானதாக இருந்தால் வன்முறையாக வாய்ப்புள்ளது. இத்தகைய செயல்கள் பள்ளிகளில் நோ்ந்தால் பெற்றோா் அல்லது தலைமை ஆசிரியரிடம் புகாா் தெரிவிக்க வேண்டும். அதே வேளையில் பேருந்தில் நிகழ்ந்தால் நடத்துநரிடம் அல்லது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள சட்ட உதவி மையத்தில் கூட புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

இதில், தலைமை ஆசிரியை எஸ்.ரவிமாலா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழக்குரைஞா் பி.ராஜேந்திரன், முதன்மை சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஏ.பஷீா் அஹமது, வழக்குரைஞா் எஸ்.ஷேக் முகமத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT