திருப்பூர்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புப் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா்களுக்கு ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள் 2022-23 ஆம் ஆண்டு கல்வி உதவித் தொகை பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகலாம். இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் பின்னா் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, போன் நெம்பா்:044-29515942 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT