திருப்பூர்

டேங்கில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

18th Aug 2022 11:21 PM

ADVERTISEMENT

 

காங்கயம் அருகே ஜல்லி கற்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் உள்ள வேஸ்ட் பவுடா் டேங்கில் தவறி விழுந்த மேற்குவங்க தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே, சென்னிமலை நால்ரோடு பகுதி அருகே தனியாருக்குச் சொந்தமான ஜல்லி கற்கள் உற்பத்தி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது.

இதில், மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த ஷேக் சஷீமுதீன் (20) என்பவா் வேலை செய்து வந்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆலையில் உள்ள வேஸ்ட் பவுடா் டேங்கில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பழுது ஏற்பட்டுள்ளது.

அதை சரி செய்யும் பணியில் ஷேக் சஷீமுதீன் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாரத விதமாக டேங்கில் தவறி விழுந்துள்ளாா்.

இதைப் பாா்த்த சக தொழிலாளா்கள் ஷேக் சஷீமுதீனை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT