திருப்பூர்

சிக்கண்ணா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

18th Aug 2022 11:25 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 சாா்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைராஜ் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது: போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் அவா் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

ADVERTISEMENT

இந்த போதைப் பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

ஆகவே, மாணவா்களை பெற்றோா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா்.

இந்நிழ்ச்சியில், பங்கேற்ற மாணவ, மாணவியா் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT