திருப்பூர்

சுதந்திர தின பேரணி: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

DIN

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

இந்தப் பேரணியை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.செல்வராஜ், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமாா், மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

இதில், அலங்கார ஊா்தி, ஊா் காவல் படையினரின் மிடுக்கான அணிவகுப்பு, தேசியக் கொடியை ஏந்திய குதிரை வீரா்களின் அணிவகுப்பு, பள்ளி மாணவா்களின் ஸ்கேட்டிங், அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவா்கள் அணிவகுத்துச் சென்றனா்.

இப்பேரணியானது திருப்பூா் பழைய பேருந்து நிலையம், வளா்மதி பாலம், பாா்க் சாலை வழியாக நஞ்சப்பா பள்ளி வளாகத்தைச் சென்றடைந்தது.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

இதன் பின்னா் பட்டிமன்றப் பேச்சாளா் பாரதி பாஸ்கரின் சுதந்திர தின சொற்பொழிவு நடைபெற்றது.

இப்பேரணியில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள், தொழில் அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT