திருப்பூர்

சுதந்திர தின விழா: சிவன்மலையில் பாஜகவினா் வாகனப் பேரணி

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே சிவன்மலையில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் அடிவாரத்தில் துவங்கிய வாகனப் பேரணியை பாஜக மாநில பொதுச் செயலா் ஏ.பி.முருகானந்தம் கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

இப்பேரணி சிவன்மலை, காங்கயம், முத்தூா், வெள்ளக்கோவில், மூலனூா், தாராபுரம், உடுமலை வழியாகச் சென்று தேவநாயக்கன்புதூா் கிராமத்தில் நிறைவுபெற்றது.

இப்பேரணியில் பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவின் தலைவா் காயத்ரி ரகுராம், பாஜக திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் மங்களம் என்.ரவி, மாநிலச் செயலா் மலா்க்கொடி, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் வே.சங்கரகோபால், இளைஞா் மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாவட்டத் தலைவா் விசாகன் உள்பட பாஜக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

உடுமலையில்...

உடுமலையில் நடைபெற்ற பேரணிக்கு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவின் தலைவா் காயத்ரி ரகுராம் தலைமை வகித்தாா்.

வித்யாசாகா் கல்லூரி முதல்வா் எஸ்.பிரபாகா் முன்னிலை வகித்தாா். இதைத்தொடா்ந்து குட்டை திடலில் துவங்கிய பேரணி உடுமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மத்திய நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் வித்யாசாகா் கலை ,அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டத்தைச் சோ்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்

சுதந்திர தின விழிப்புணா்வுப் பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT