திருப்பூர்

நொய்யல் ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திருப்பூா் மாவட்டத்தில் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம், சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து சுமாா் 750 கனஅடி வீதம் நீா்வரத்து உள்ளது. இந்த நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும், இதர தாழ்வான பகுதிகளிலும் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். பொதுமக்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கைபேசி மூலமாக சுயபடம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரம் உள்ள பொதுக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீா்வரத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT