திருப்பூர்

பரம்பிக்குளம் - ஆழியாறு பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டம்

10th Aug 2022 10:15 PM

ADVERTISEMENT

பரம்பிக்குளம் - ஆழியாறு பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டும் செல்லும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி பரம்பிக்குளம் - ஆழியாறு பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி ஆகஸ்ட் 21 இல் நடைபெற உள்ள பேரணிக்கான ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சுதந்திர தினத்தன்று பல்லடம் வட்டாரப் பகுதியில் நடைபெற உள்ள ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசுக்கு கோரிக்கை வைப்பது, பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ஈசன், பி.ஏ.பி. பாசன சபைத் தலைவா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT