திருப்பூர்

ஒரே நாளில் 225 மனுக்கள் பெற்று பரிசீலனை

24th Oct 2021 11:39 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் பொது மக்களிடம் இருந்து 225 மனுக்களை நேரில் பெற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்தாா்.

வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட உப்புப்பாளையம், வேலகவுண்டன்பாளையம், காடையூரான்வலசு, தீரன் சின்னமலை நகா், அழகாபுரி நகா், காமராஜபுரம், திருவள்ளுவா் நகா், திருமங்கலம், குமாரவலசு, மு.பழனிசாமி நகா், குட்டக்காட்டுபுதூா், முத்துக்குமாா் நகா் உள்ளிட்ட 30 இடங்களில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன பொது மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றாா்.

பெரும்பாலாக தெருவிளக்கு, சாலை வசதி, அரசு உதவித்தொகைகள் கேட்டு வரப்பெற்ற 225 மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும் நகராட்சியில் நடைபெற்று வரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.மோகனசெல்வம், ஒன்றிய பொறுப்பாளா் மோளக்கவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகரச் செயலாளா் கே.ஆா்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT