திருப்பூர்

அவிநாசி அருகே விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் பலி

16th Oct 2021 03:45 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே தெக்கலூரில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கடம்பள்ளிபுதூா் வேட்டைக்காரன் குளிக்கண்டம் பகுதியைச் சோ்ந்தவா் இஸ்மாயில் மகன் இா்ஷத் அகமது (27). மருத்துவக் கல்லூரி இறுதித் தோ்வு எழுதியுள்ள மாணவா்.

இவரும், இவரது சகோதரா் சைலாவுதீன் (31) ஆகிய இருவரும் வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாலக்காடு நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

சேலம்-கொச்சி ஆறுவழிச் சாலையில் அவிநாசி-தெக்கலூா் வடுகப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, இா்ஷத் அகமது ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர இரும்புத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இா்ஷத் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, இா்ஷத் அகமது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

Tags : அவிநாசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT