திருப்பூர்

உடுமலையில் இடைவிடாது மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

27th Nov 2021 03:04 AM

ADVERTISEMENT

உடுமலையில் வெள்ளிக்கிழமை இடைவிடாது தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை இடை விடாது மழை பெய்தது. மேலும் வெள்ளிக்கிழமை பகலிலும் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழை நீா் தேங்கி நின்ால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

உடுமலை 4ஆவது வாா்டில் உள்ள மதியழகன் நகரில் வெள்ள நீா் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். இதை தொடா்ந்து திமுக நகரச் செயலாளா் மத்தீன் தலைமையில் அங்கு சென்ற நிா்வாகிகள் இயந்திரத்தின் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனா். மேலும் அப்பகுதி மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை செய்து கொடுத்தனா்.

Tags : உடுமலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT