திருப்பூர்

சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுகளால் சுகாதார சீா்கேடு

DIN

வெள்ளக்கோவிலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

வெள்ளக்கோவில் பிரதான கடை வீதியில் முத்தூா் பிரிவு நான்கு சாலை சந்திப்பு அருகில் இருக்கும் சாக்கடை கால்வாயில் மழைக் காலங்களில் சாலையில் ஓடி வரும் வெள்ளம் சாக்கடைக்குள் கலந்து நிரம்புவதால் கழிவுகள் ஈரோடு சாலை மற்றும் காங்கயம் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்குகின்றன.

இதனால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் பேருந்து நிறுத்தம், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், வணிக வளாகங்கள் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. சாக்கடையின் அகலம், உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Image Caption

சாலையில் கிடக்கும் சாக்கடை கழிவுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT