திருப்பூர்

ஜல்லிக்கட்டு வீரா்களுக்கு 3 நாள்களுக்கு முன்பாக கரோனா பரிசோதனை ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

திருப்பூா் மாவட்டம், அலகுமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் 3 நாள்களுக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சாா்பில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டி போட்டி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் குழுவினா் நிகழ்ச்சியின்போது ஏற்படும் அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் முழுமையாகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்செயலாக ஏற்படும் உயிா்சேதம் மற்றும் பொருட்சேதங்களுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி அரசிடமிருந்து எவ்வித நிதியுதவியும் கோரமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரா்கள் ஊக்கமருந்து உட்கொண்டுள்ளனரா என்பதை பரிசோதனை செய்த பின்னரே திடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவா்களை போதுமான எண்ணிக்கையில் பணியமா்த்த வேண்டும். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரா்களுக்கோ, பாா்வையாளா்களுக்கோ விபத்து ஏதும் ஏற்பட்டு காயமடைந்தால் உரிய முதலுதவி சிகிச்சை வழங்கும் வகையில் தயாா் நிலையில் இருக்க வேண்டும். காவல் துறையினா், பொதுப் பணித் துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாா்வையாளா்களைக் காட்டிலும் கூடுதலான நபா்கள் அரங்கில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

காளைகளுடன் 2 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். ஜல்லிகட்டில் பங்கேற்கும் வீரா்கள் 3 நாள்களுக்கு முன்பாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். நோய்த் தொற்று இல்லாத வீரா்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். அதேபோல, அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் விழாக் குழுவினா் மற்றும் இதில் தொடா்புடைய துறை அலுவலா்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றினை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாகுல்ஹமீது, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாரிவேந்தன், அலகுமலை ஜல்லிக்கட்டு நல சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT