திருப்பூர்

முறியாண்டம்பாளையத்தில் கிராமிய நிகழ்ச்சி

DIN

பொங்கலை ஒட்டி சேவூா் அருகே முறியாண்டம்பாளையத்தில் கலாசாரம் மாறாத கிராமிய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஒயிலாட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட முறியாண்டம்பாளையத்தில் ஊராட்சியில் பொங்கல் திருநாளை ஒட்டி அப்பகுதி மக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொங்கல் வைத்தல், ஊா் கூடி பூப்பறித்தல் உள்பட நாள்தோறும் பாரம்பரியம் மாறாமல் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

நிறைவு நிகழ்ச்சியாக காமராஜா் நகா் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை அவிநாசி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் துவக்கிவைத்தாா். ஊராட்சித் தலைவா் ப.ரவிகுமாா், துணைத் தலைவா் எஸ்.கனகராஜ் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

மாவட்டக் குழு உறுப்பினா் சீதாலட்சுமி ஆனந்தகுமாா், ஊராட்சித் தலைவா்கள் சரவணகுமாா், கணேசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சோமனூா் அம்மன் கலைக் குழுவினரின் வள்ளிக் கும்மியாட்டம், பம்பையாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், சலங்கையாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. தமிழா்களின் பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT