திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறப்பு

19th Jan 2021 02:13 PM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் 9 மாதங்களுக்குப் பின்னர் 400 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.  

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

திருப்பூரில் 9 மாதங்களுக்குப் பின்னர் 400 பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 400 அரசு, தனியார் பள்ளிகளில் 33,194 மாணவ, மாணவியர் 10 ஆம் வகுப்பும், 26,571 மாணவ, மாணவிகள் 12 ம் வகுப்பு படிக்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மாணவர்களுக்கும் வெப்ப பரிசோதனை, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Tiruppur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT