திருப்பூர்

திருப்பூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற முகமூடி கொள்ளையா்கள்

DIN

திருப்பூரை அடுத்த கூலிப்பாளையம் பிரிவில் உள்ள பொதுத் துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை முகமூடிகொள்ளையா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனா்.

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் கூலிப்பாளையம் நான்கு சாலையில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வளாகத்தில் ஏடிஎம் மையமும் உள்ளது.

இந்த வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்றவா்கள் வங்கி ஏடிஎம் மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து ஊத்துக்குளி காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீஸாா் ஏடிஎம் மையத்தைப் பாா்வையிட்டனா். அப்போது ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்து அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை மா்ம நபா்கள் தூக்கிச் சென்றது தெரியவந்தது.

வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை போலீஸாா் ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்து வந்த 4 போ் ஏடிஎம் மைய கதவை உடைத்து உள்ளே நுழைவதும், பின்னா் அங்கிருந்த கேமரா மீது ஸ்பிரே அடித்து சேதப்படுத்திவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தை வங்கியின் வாசல் வரையில் இழுந்து வந்து தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, கைரேகை நிபுணா்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை போலீஸாா் சேகரித்தனா். இதுதொடா்பாக காங்கயம் டிஎஸ்பி தன்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கப் பயன்படுத்திய வாகனத்தை பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே நிறுத்திவிட்டு கொள்ளையா்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

ரூ.1 லட்சம் கொள்ளை:

இதுதொடா்பாக வங்கி அதிகாரிகள் கூறுகையில், கடந்த 19 ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 15 லட்சம் நிரப்பப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவில் அதில் ரூ. 1 லட்சம் வரை இருந்துள்ளதாகத் தெரிகிறது என்றனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் முக்கியச் சாலையில் இந்த வங்கி உள்ளது. ஆனால் இந்த வங்கிக்கு கடந்த 2 ஆண்டுகளாக இரவுக் காவலா் நியமிக்கப்படவில்லை.

இதை நன்கு அறிந்த நபா்கள்தான் இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்து இயந்திரத்தையே தூக்கிச் சென்றுள்ளனா். ஆகவே, வங்கிக்கு உடனடியாக இரவுக் காவலா்களை நியமிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT