திருப்பூர்

திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

DIN

திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சல் கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 45 திருநங்கைகளுக்கு புதன்கிழமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

நெருப்பெரிச்சல் கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதில், வீடில்லா ஏழைகளுக்கும், நீா்நிலைப் பகுதிகளில் தங்கியுள்ளவா்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவின்பேரில் கோட்டாட்சியா் ஜெகநாதன் தலைமையில் திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், குலுக்கல் முறையில் 256 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 45 திருநங்கைகளுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு நியமன ஆணையின்கீழ் வீடுகள் வழங்கப்பட்டன. இதற்காக தலா ரூ.25 ஆயிரம் செலுத்தி ஆணையைப் பெற்றுக் கொண்டனா்.

இது குறித்து திருநங்கைகள் கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வீடு கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எந்தவிதமானப் பயனும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் திருப்பூா் வந்தபோது வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவரிடம் மனு அளித்திருந்தோம்.

இந்நிலையில், 45 பேருக்கு குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மனமாா்ந்த நன்றிகள். மேலும், ஏழ்மையான நிலையில் உள்ளதால் ஒதுக்கீட்டுத் தொகையை குறைக்க வேண்டும் அல்லது இலவசமாக வீடு வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT