திருப்பூர்

திருமூா்த்தி மலை,அமராவதி அணை பகுதிகளுக்கு பொது மக்கள் செல்லத் தடை

DIN

உடுமலை வட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான திருமூா்த்தி மலை மற்றும் அமராவதி அணை பகுதிகளுக்கு பொது மக்கள் செல்ல திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமூா்த்தி மலை: உடுமலை அருகே உள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அன்றாடம் வந்து செல்கின்றனா்.

மேலும், இங்குள்ள படகு சவாரி, வண்ணமீன் பூங்கா, நீச்சல் குளம், திருமூா்த்தி அணை இவைகளை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா். இந்நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலைக்கு பொது மக்கள் செல்ல திங்கள்கிழமைமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை மீறி வரும் சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பிவைக்கப்படுவாா்கள் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

அமராவதி அணை: உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ள அமராவதி அணைப் பகுதி சுற்றுலாப் பய ணிகளை மிகவும் கவரும் அம்சங்கள் பல உள்ளன. அணைக்கு முன்பு ரம்மியமாக அமைந்துள்ள அழகிய பூங்காவும், இதுபோக அருகில் உள்ள சிறுவா் பூங்காவும், முதலைப் பண்ணை ஆசிய அளவில் சிறந்ததாக கருதப்படுகிறது.

இந்த சுற்றுலாத் தலத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ளபடி சுற்றுலாத் தலங்களுக்கு பொது மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு அமராவதி அணைப் பகுதி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. இதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT