திருப்பூர்

’கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்’: திருப்பூர் திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் பங்கேற்றாா்.

கூட்டத்தில், திருப்பூா் மாவட்டத்தில் கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு முகக் கவசம், சானிடைஸா், கபசுர குடிநீா் வழங்க வேண்டும். கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நீா் மோா், குடிநீா் வழங்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்.ஆா்.ஜி.கல்லூரியில் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT