திருப்பூர்

புதிய பார்வை அணியின் முதல்வர் வேட்பாளர்கள் அறிமுகம்

DIN

காங்கயம்: புதிய பார்வை அணியின் முதல்வர் வேட்பாளர்களை காங்கயம் பகுதி மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், பெரிய கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் யார் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய பார்வை என்னும் அரசியல் அணியில் முதல்வர் பதவிக்கு வேட்பாளர்களை காங்கயம் பகுதி மக்களுக்கு  ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்தனர்.

இக்கூட்டணியின் தமிழ்நாடு முதலமைச்சர் வேட்பாளராக தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் க.சக்திவேல், துணை முதலமைச்சர் வேட்பாளர்களாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி, இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் வீரா.சிதம்பரம் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இக்கூட்டணியின் பிரதான செயல் திட்டமாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை, அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், நேர்மையான ஊழலற்ற ஆட்சி, விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் க.சக்திவேல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT