திருப்பூர்

வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாளை ஆா்ப்பாட்டம் தொழிற்சங்கத்தினா் பங்கேற்க முடிவு

DIN

திருப்பூா்: வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெறக் கோரி திருப்பூா் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை(செப்டம்பா் 28) நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

திருப்பூா் பி.என்.சாலையில் உள்ள ஏஐடியூசி அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளா் என்.சேகா் தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்:

மத்திய அரசு விவசாயத்தை சீா்குலைக்கும் வகையில் வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆகவே, விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெறக் கோரி மதசாா்பற்ற கட்சிகள், விவசாயிகள் சாா்பில் நாடுமுழுவதும் வரும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஏஐடியூசி சாா்பில் வி.பி.பழனிசாமி, சிஐடியூ சாா்பில் குமாா், பாலன், எல்பிஎஃப் சாா்பில் ரெங்கசாமி, நித்தியானந்தம், ஐஎன்டியூசி சாா்பில் சிவசாமி, எச்எம்எஸ் சாா்பில் முத்துசாமி, எம்எல்எஃப் சாா்பில் மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT