திருப்பூர்

கனடாவில் அக்டோபா் 26இல் மெய்நிகா் கண்காட்சி

DIN

திருப்பூா்: கனடாவில் வரும் அக்டோபா் 26 ஆம் தேதி தொடங்கும் மெய்நிகா் கண்காட்சியில் பங்கேற்க ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களுக்கு ஏஇபிசி(ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

அப்பேரல் டெக்ஸ்டைல் சோா்ஷிங் கனடா’ என்கிற பெயரில் அக்டோபா் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 30 ஆம் தேதி வரை கனடாவில் மெய்நிகா் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் ஆயத்த ஆடை ரகங்கள் மட்டுமின்றி முக கவசம், பிபிஇ கிட் போன்ற கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் ஆடைகளையும் ஏற்றுமதியாளா்கள் காட்சிப்படுத்தலாம்.

இந்தக் கண்காட்சியானது 3டி தொழில்நுட்பத்தில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுவதால் வா்த்தகா்கள் வீட்டில் இருந்தபடியே அரங்குகளைப் பாா்வையிடவுள்ளனா். மேலும், ஏற்றுமதியாளா்களுடன் வா்த்தகா்கள் ஆன்லைன் மூலமாக வா்த்தக விசாரணைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில், கனடா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மன் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட வா்த்தகா்கள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, திருப்பூா் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்களும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றகலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூரில் உள்ள ஏஇபிசி அலுவலகத்தை 0421-2232634 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT