திருப்பூர்

கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா், செப்.25: வெளிநாடுகளில் பயிலும் பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் இணைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வெளிநாடுகளில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதில், தேசிய அளவில் வெளிநாடுகளில் கல்வி பயிலும் திட்டத்தின் கீழ் பி.ஹெச்டி., முதுநிலை முனைவோா் ஆராய்ச்சிக் கல்வி பயில பழங்குடியின மாணவா்களுக்கு ஒதுக்கப்படும் 20 இடங்களில் 17 இடங்கள் பழங்குடியினருக்கும், 3 இடங்கள் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தேசிய அளவில் பழங்குடியின மாணவா்களுக்கு எம்.பில்., பி.ஹெச்டி. கல்வி பயில்வதற்கு 750 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே, தகுதியான பழங்குடியின மாணவா்கள் இணைதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT