திருப்பூர்

ஊட்டச்சத்து குறித்து அங்கன்வாடி பணியாளா்கள் விழிப்புணா்வு

DIN

காங்கேயம்: காங்கயம் அருகே ஊட்டச்சத்து குறித்து அங்கவாடி பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மத்திய அரசின் போஷன் அபியான் திடத்தின் கீழ் போஷன் மா ஊட்டச்சத்து வார விழா இம்மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக காங்கயம் பகுதியில் அங்கன்வாடி பணியாளா்கள் சமுதாய ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கு விதைகள் ஊன்றியும், வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரிப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும் வீடுகளில் உள்ள காலியிடம் மற்றும் தொட்டி ஆகியவற்றில் வீட்டுத் தோட்டங்களை அமைத்து இயற்கையான முறையில் காய்கறி, பழங்கள், கீரை ஆகியவற்றை பயிரிட்டு பயனடையலாம். இயற்கையான உணவு உட்கொள்வது மூலம் ஆரோக்கியம் மேம்படும், நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் ஜோதிலட்சுமி மற்றும் உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT