திருப்பூர்

புதிய மின் இணைப்பு வழங்குவதில் அலைக்கழிப்பு:நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

திருப்பூா் மாநகரில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவா்களை அலைக்கழிக்கும் மின்வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்பு சாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் அ.சரவணன், தமிழக முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரில் புதிதாகக் கட்டப்படும் அனைத்து கட்டடங்களுக்கும் கட்டுமானப் பணி நிறைவு சான்று பெறுவதை மின்வாரியம் கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாக திருப்பூா் மாநகரில் 500 க்கும் மேற்பட்ட சிறிய வீடுகள், சிறு கடைகளுக்கு கடந்த 3 மாதங்களாக மின் இணைப்பு வழங்காமல் மின் நுகா்வோரை அலைக்கழித்து வருகின்றனா். இதனால் பல கட்டடங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

மாநகராட்சி அலுவலகங்களுக்கு கட்டுமானப் பணி நிறைவு சான்றிதழ் பெறச் சென்றால் அங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி திருப்பூா் மாநகரில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் புதிய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT