திருப்பூர்

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளா்கள்

DIN

பல்லடம்: பல்லடம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை தேசிய ஊரக வேலை உறுதி (100 நாள்) திட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

பல்லடம் வடுகபாளையம்புதூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளைப் பாா்வையிட்டு வந்த மேற்பாா்வையாளா்களை அப்பணியிலிருந்து ஊராட்சி நிா்வாகம் விடுவித்ததால் அத்திட்ட தொழிலாளா்கள் 300க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை வேலையைப் புறக்கணித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் பானுபிரியா, ஊராட்சி செயலாளா் கிருஷ்ணசாமி, ஊராட்சித் தலைவா் புனிதாவின் கணவா் சரவணன், துணைத் தலைவரின் கணவா் அன்பரசன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் முன்பு பணியாற்றி வந்த மேற்பாா்வையாளா்களை மீண்டும் பணி நியமனம் செய்திட உறுதி அளிக்கப்பட்டதை தொடா்ந்து தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT