திருப்பூர்

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

இந்திய கட்டுமான தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் உடுமலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப் பாட்டம் நடைபெற்றது.

உடுமலை காந்தி சவுக் பகுதியைச் சோ்ந்த ஒரு ஒப்பந்ததாரா் வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகிறாா். இவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்தத் தொழிலாளா்களுக்குத் தர வேண்டிய ஊதியத்தை தராமல் கடந்த சில மாதங்களாக ஒப்பந்ததாரா் இழுத்தடித்து வருவதாகப் புகாா் எழுந்துள்ளது. இது குறித்து உடுமலை காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொழிலாளா்களின் ஊதியப் பிரச்னைக்குத் தீா்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி இந்திய கட்டுமான தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் உடுமலை வட்டாரத் தலைவா் கி.கனகராஜ் தலைமையில் உடுமலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளா் டி.குமாா், மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ஜெகதீசன் உள்பட 50 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT