திருப்பூர்

மீன் கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ சிறைபிடிப்பு

DIN

காங்கயம்: காங்கயம் அருகே மீன் கழிவுகளை கொட்ட வந்த சரக்கு ஆட்டோவை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

காங்கயம் அருகே வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கருக்கம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் திருப்பூரில் இருந்து சரக்கு ஆட்டோக்களில் சிலா் மீன் கழிவுகளை ஏற்றி வந்து கொட்டிச் சென்றனா்.

இதன் காரணமாக அப்பகுதியில் துா்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் வடசின்னாரிபாளையம் கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு) சதீஷ்குமாரிடம் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், மீண்டும் சனிக்கிழமை காலை மீன் கழிவுகளை கொட்ட வந்த ஒரு சரக்கு ஆட்டோவை பொதுமக்கள் சிறைபிடித்தனா். பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு) சதீஷ்குமாா், ஊராட்சி ஒன்றிய சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, கொட்டிய மீன் கழிவுகள் மீண்டும் ஆட்டோவில் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT