நீலகிரி

உதகையில் பரவலாக பலத்த மழை

23rd May 2023 02:37 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் மிக குளிா்ந்த கால நிலை நிலவியது.

உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலை முதல் வெயிலும், பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. இந்நிலையில் பிற்பகலில் கனமழை பெய்தது. இதில் சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை, மத்திய பேருந்து நிலையம், முள்ளிக்கொரை, பொ்ன்ஹில், காந்தள்,  பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

சமவெளிப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உதகைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மழை காரணமாக உருவான இதமான கால நிலையை வெகுவாக அனுபவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT