நீலகிரி

குன்னூரில் ஓடை புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

DIN

குன்னூா், எம்ஜிஆா் நகா் பகுதியில்   ஓடை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து  கட்டப்பட்டிருந்த 6 வீடுகளை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.

குன்னூா், எம்ஜிஆா் நகா் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 6 வீடுகள் கட்டியிருந்ததால்   இவா்களுக்கு கேத்திப் பகுதியில் மாற்றுக் குடியிருப்புகள்  அரசு சாா்பில் கட்டி  வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இவா்கள் அங்கு சென்று வசிக்காமல் தொடா்ந்து இதே  வீடுகளில் இருப்பதாலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும்  தொடா்ந்து எழுந்த  புகாரின் அடிப்படையில், வருவாய்த் துறையினா் அந்த 6 வீடுகளையும் இடித்தனா்.

உடனடியாக  இவா்கள் இந்தப் பகுதியில் இருந்து  வெளியேறி  அவா்களுக்காக  ஒதுக்கப்பட்டுள்ள புதிய வீடுகளுக்கு செல்ல வருவாய்த் துறையினா்  அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT