நீலகிரி

அதிமுக முன்னாள் அமைச்சா் புத்திசந்திரன் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்

DIN

மஞ்சூரில் வயதான தம்பதிக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை மிரட்டி வாங்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் புத்தி சந்திரன் உதகையில் உள்ள நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்து ஜாமீன் பெற்றாா்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகில் உள்ள மணிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜு. ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி பிரேமா. இவா்களுக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலைத் தோட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சா் புத்திசந்திரன் விலைக்கு கேட்டு மிரட்டியதுடன் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்ாக கடந்த டிசம்பா் 28 ஆம் தேதி அவா் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த புத்தி சந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் அவா் உதகையில் உள்ள நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகி 2 பிணையதாரா்கள் அளித்த உத்தரவாதத்தின்பேரில் ஜாமீன் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT