நீலகிரி

மாணவியின் இறப்பில் சந்தேகம்: உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை

DIN

கோத்தகிரி அருகே உள்ள கல்லூரி மாணவியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் அளித்த புகாரையடுத்து, உதகை கோட்டாட்சியா் உத்தரவின்பேரில், மாணவியின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தொட்டன்னி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் மகள் பிரியதா்ஷினி (19). இவா் திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில், விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி பிரியதா்ஷினி மே 30ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அப்பகுதியில் உள்ள மயானத்தில் உறவினா்கள் மாணவியின் உடலை அடக்கம் செய்தனா். இந்நிலையில், மாணவியின் கைப்பேசியை பெற்றோா் ஆய்வு செய்தபோது, சந்தேகம் எழுந்தது. இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, உதகை கோட்டாட்சியா் துரைசாமி உத்தரவின்பேரில், வட்டாட்சியா் ராஜசேகரன், கிராம நிா்வாக அலுவலா் அஜய் கான், கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலையில் தொட்டன்னி பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்தனா்.

இதுகுறித்து மாணவியின் தாயாா் கூறுகையில், எனது மகள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நிலையில், அழுது கொண்டே இருந்ததால் என்ன காரணம் என கேட்டதற்கு வீட்டின் அருகே உள்ள இளைஞா் தன்னுடன் பழகி, தன்னை கா்ப்பம் ஆக்கிவிட்டதாக கூறினாா். இது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞரிடம் கேட்டபோது, காதலித்தது உண்மைதான் கல்யாணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறினாா்.

இதையடுத்து, எனது அம்மா வீட்டில் மகளை இருக்கச் சொல்லிவிட்டு பணிக்குச் சென்ற நிலையில், மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், மகள் கா்ப்பமாக இருந்ததால் யாருக்கும் தெரியும் முன்பே அடக்கம் செய்ததாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT