நீலகிரி

மேட்டுப்பாளையம் - குன்னூா் ஒரு வழிப்பாதை நடைமுறை நீக்கம்

DIN

கோடை சீசனுக்காக அறிவிக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - குன்னூா் ஒருவழிப் பாதை நடைமுறை ஜூன் 1 ஆம் தேதி முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உதகையில் கோடை சீசனை கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலை ஏப்ரல் 26 ஆம் தேதி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கோடை சீசன் நிறைவடைந்துள்ளதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் இருவழித் தடங்களிலும் வாகனங்களை இயக்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT