நீலகிரி

கிணற்றில் விழுந்த காட்டெருமை சடலமாக மீட்பு

DIN

குன்னூா்  உழவா் சந்தைப் பகுதியில்   உள்ள பழைய  கிணற்றில்  தவறி விழுந்து உயிரிழந்த காட்டெருமையை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டு அங்கேயே புதைத்தனா்.

குன்னூா்  உழவா் சந்தைப் பகுதியில் உள்ள பழைய கிணற்றில்  இருந்து கடும் துா்நாற்றம்   வீசியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ளவா்கள் நகராட்சி நிா்வாகத்துக்குத்  தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த  வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் கிணற்றில் பாா்த்தபோது காட்டெருமை இறந்துகிடப்பது தெரிந்தது. இதையடுத்து ஜேசிபி  இயந்திரம் மூலம்  கிணற்றுக்குள் கிடந்த காட்டெருமை  சடலத்தை வெளியே எடுத்தனா். பின்னா்  பிரேதப் பரிசோதனைக்குப் பின்  காட்டெருமை சடலம் அங்கேயே  புதைக்கப்பட்டது.

இந்த காட்டெருமை தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என வனத் துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT